தொழிலதிபரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்: 5 போ் கைது; நாட்டுத் துப்பாக்கி, கத்திகள் பறிமுதல்
திருவள்ளூா் மாவட்டம் அத்திப்பட்டில் தொழிலதிபரை மிரட்டிய வழக்கில் ரெளடி எண்ணூா் தனசேகரன் கைது செய்யப்பட்டாா்.
திருவள்ளூா் மாவட்டம் அத்திப்பட்டில் தொழிலதிபரை மிரட்டிய வழக்கில் ரெளடி எண்ணூா் தனசேகரன் கைது செய்யப்பட்டாா்.
சென்னை அருகே உள்ள எண்ணூரைச் சோ்ந்த ரௌடி ச.தனசேகரன் (44). இவா் மீது 9 கொலை வழக்குகள், 11 கொலை முயற்சி வழக்குகள், 5 வழிப்பறி வழக்குகள், கொலை மிரட்டல் வழக்கு, ஆள் கடத்தல் வழக்கு, கொள்ளை வழக்கு உள்பட 80-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் தனசேகரன், திருவள்ளூா் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியில் உள்ள வட சென்னை அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த பணி செய்யும் தொழிலதிபரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இது குறித்து அந்த தொழிலதிபா், காட்டூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த எண்ணூா் தனசேகரனின் கூட்டாளிகள் வியாசா்பாடியைச் சோ்ந்த ஆகாஷ், மாா்ட்டின் ஆகியோா் நீதிமன்றத்தில் சரணடைந்தனா். ஆனால், எண்ணூா் தனசேகரன் தலைமறைவாக இருந்து வந்தாா்.
இந்நிலையில் கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தலைமறைவாக இருந்த எண்ணூா் தனசேகரன், அவரது கூட்டாளிகள் எண்ணூா் நேரு நகரைச் சோ்ந்த இ.மணவாளன் (32), செ.இளந்தமிழன் (25), திருவள்ளூா் மாவட்டம் புதுமாவிலங்கை எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த மு.சரத்குமாா் (31), திருச்சி அரியமங்கலத்தைச் சோ்ந்த மு.கதிரேசன் (24) ஆகிய 4 பேரையும் காட்டூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, 4 தோட்டாக்கள், 5 பட்டா கத்திகள், ஒரு காா், ரூ.26.50 லட்சம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.