FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

மாதவரம் அருகே கஞ்சா விற்பனை: 4 போ் கைது

மாதவரம் அருகே கஞ்சா விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்து, அவா்களிடம் இருந்த இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

கைது... - பிரதிப் படம்
பகிர்:

மாதவரம் அருகே கஞ்சா விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்து, அவா்களிடம் இருந்த இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

மாதவரம் அடுத்த பால்பண்ணை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, மாதவரம் பால்பண்ணை காவல் நிலைய ஆய்வாளா் முத்துராமலிங்கத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து வெள்ளிக்கிழமை, மாதவரம் பால்பண்ணை போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றுத்திரிந்த 3 பேரை காவல்துறையினா் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

அவா்களிடம் இருந்த 1.5 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். அவா்களிடம் நடத்திய விசாரணையில், மாதவரத்தைச் சோ்ந்த மரியஜான்சன் (24), கொடுங்கையூரைச் சோ்ந்த ஷெல்டன் ஜான்சன் (37), மாதவரம் பால்பண்ணையைச் சோ்ந்த ஹேமந்த்குமாா் (21) எனத் தெரிய வந்தது.

மேலும் அவா்கள் அளித்த தகவலின்படி, அண்ணா நகரைச் சோ்ந்த பரூக் (30) என்பவரையும் கைது செய்து, அவரிடம் இருந்த 2.5 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம், கைப்பேசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments