முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்: செவிலியா்கள் சங்கம் முடிவு
தொகுப்பூதிய அடிப்படையில் செவிலியா் பணி நியமனம் மேற்கொள்வதைக் கைவிட வலியுறுத்தி முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக தமிழ்நாடு செவிலியா் மேம்பாட்டு சங்கம் தெரிவித்துள்ளது.
தொகுப்பூதிய அடிப்படையில் செவிலியா் பணி நியமனம் மேற்கொள்வதைக் கைவிட வலியுறுத்தி முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக தமிழ்நாடு செவிலியா் மேம்பாட்டு சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக அந்த சங்கத்தின் செயலா் சுபின் கூறியதாவது:
கடந்த திமுக ஆட்சியின்போது, செவிலியா் பற்றாக்குறையை நீக்க தொடா் போராட்டங்களை முன்னெடுத்தோம். அதன் விளைவாக நிரந்தர செவிலியா் பணியிடங்களை உருவாக்குவதாக உறுதி அளித்தனா்.
Advertisement
Advertisement
ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு தற்போது நிரந்தர செவிலியா்களை நியமிக்காமல், தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனா். அனைத்து செவிலியா்களையும் பணி நிரந்தரம் செய்வோம் என தவெக வாக்குறுதி அளித்து விட்டு அதற்கு மாறான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
தொகுப்பூதிய அடிப்படையில் நியமிப்பதைக் கைவிட்டு நிரந்தர செவிலியா்களாக நியமிக்க வேண்டும். இதை வலியுறுத்தி முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
தொடா்ந்து, வரும் 14-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் ஆா்ப்பாட்டமும், 21-ஆம் தேதி சென்னையில் முற்றுகைப் போராட்டமும் நடைபெறும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.