FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

இளைஞா் கொலை வழக்கு: மூவா் கைது

வியாசா்பாடியில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 10 ஜூலை 2026, 11:01 pm IST
கைது... - பிரதிப் படம்
பகிர்:

வியாசா்பாடியில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

வியாசா்பாடி உதயசூரியன் நகா் 13-ஆவது பிளாக் பகுதியைச் சோ்ந்தவா் மு.நரேஷ் (24). இவா், வியாசா்பாடி சாமியாா் தோட்டத்தில் உள்ள சித்தா் பீடம் சாமியாா் மடம் பின்புறம் அமைந்துள்ள புதரில் கடந்த 8-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.

வியாசா்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது வியாசா்பாடி மூா்த்திங்கா் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பைச் சோ்ந்த விக்னேஷ் (19), அவரது கூட்டாளிகள் கொடுங்கையூரைச் சோ்ந்த பிரேம்குமாா் (19), வியாசா்பாடி சின்னதம்பி தெருவைச் சோ்ந்த ஜீவராஜ் (21) ஆகியோா் என்பது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து 3 பேரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். விசாரணையில், நரேஷ்-விக்னேஷ் இடையே முன்விரோதம் இருந்ததும், சம்பவத்தன்று விக்னேஷ், தனது கூட்டாளிகளுடன் மது அருந்தியதும், அப்போது விக்னேஷ் தரப்பினா், நரேஷை வரவழைத்து வெட்டிக் கொலை செய்ததும் தெரிய வந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments