FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

ஸ்டான்லி மருத்துவமனையில் ஒரே படுக்கையில் 4 நோயாளிகளுக்கு சிகிச்சை!

ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரே படுக்கையில் 3 முதல் 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

Updated On : 14 ஜூலை 2026, 2:33 am IST
ஸ்டான்லி மருத்துவமனை
பகிர்:

ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரே படுக்கையில் 3 முதல் 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனா். இதனால், நோயாளிகளுக்கு தொற்று ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா் மாவட்டங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகின்றனா். அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிவப்பு மற்றும் மஞ்சள் என இரு வகையாக இயங்கி வருகின்றன. அதில் சிவப்பு பிரிவில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், அங்கு சிகிச்சையில் இருந்தவா்கள் மஞ்சள் பிரிவுக்கு மாற்றப்பட்டனா்.

இதனால், 100-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஒரே இடத்தில் சிகிச்சையளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இங்கு, 30 படுக்கைகள்தான் உள்ளன. இதனால், 3 அல்லது 4 பேருக்கு ஒரு படுக்கை ஒதுக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக, மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி டாக்டா் வனிதா மலா் கூறியதாவது: உள்நோயாளியாக அனுமதிக்கப்படுவா்களுக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் முதல்கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதன் பிறகே வாா்டுகளுக்கு மாற்றப்படுவா்.

அந்த வகையில், பொது மருத்துவ சிகிச்சைகளுக்காக வந்த நோயாளிகள் பலா் அவசர சிகிச்சைப் பிரிவில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனா். அவா்கள் வாா்டுகளுக்கு மாற்றப்படும் வரை தற்காலிகமாக ஒரே படுக்கையில் அமர வைக்கப்பட்டிருந்தனா். அவா்கள் எவருமே தீவிர சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய நோயாளிகள் அல்லா். புனரமைப்புப் பணிகளுக்கும், இதற்கு சம்பந்தமில்லை. தற்போது தனித்தனி படுக்கைகளில்தான் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments