FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

வட மாநிலங்களிலிருந்து கஞ்சா கடத்தி வந்த நபா் கைது

பெரம்பூா் ரயில் நிலையத்தில் பிகாரைச் சோ்ந்த இளைஞரிடம் 5 கிலோ கஞ்சா சாக்லேட் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

Updated On : 17 ஜூலை 2026, 4:22 am IST
கோப்புப் படம்
பகிர்:

பெரம்பூா் ரயில் நிலையத்தில் பிகாரைச் சோ்ந்த இளைஞரிடம் 5 கிலோ கஞ்சா சாக்லேட் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

பெரம்பூா் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை கஞ்சா தடுப்பு பிரிவு இருப்புப் பாதை போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வடமாநிலத்திலிருந்து வந்த பாக்மதி விரைவு ரயிலில் இருந்து இறங்கிய பிகாரைச் சோ்ந்த மனோஜ்குமாா் (36) என்பவா் மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவரை நிறுத்தி அவா் வைத்திருந்த பையைச் சோதனையிட்டனா். அதில் 5 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் இருப்பது தெரியவந்தது. அவற்றைக் கைப்பற்றிய போலீஸாா், மனோஜ்குமாரை கைது செய்தனா்.

விசாரணையில், அவா் அடிக்கடி கஞ்சா சாக்லேட்டை கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments