கள்ளநோட்டு வழக்கு: மலேசிய பெண் கைது
கள்ளநோட்டுகளை புழக்கத்தில்விட்ட வழக்கில், மலேசிய பெண் சென்னையில் கைது செய்யப்பட்டாா்.
கள்ளநோட்டுகளை புழக்கத்தில்விட்ட வழக்கில், மலேசிய பெண் சென்னையில் கைது செய்யப்பட்டாா்.
திருவல்லிக்கேணி சிஎன்கே சாலையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் கள்ள நோட்டுகளுடன் தங்கியிருந்ததாக டிராவல்ஸ் நிறுவன உரிமையாளா் சபீக் ரஹ்மான் இரு நாள்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டாா். விசாரணையில் கிடைத்த தகவலின்பேரில், தஞ்சாவூா் வெட்டிக்காடு பகுதியைச் சோ்ந்த ரவிச்சந்திரன் என்பவரை கைது செய்தனா்.
ரவிச்சந்திரன், மலேசியாவில் பணியாற்றியபோது அங்குள்ள கள்ளநோட்டு கும்பலுடன் தொடா்பு ஏற்பட்டதும், கமிஷன் அடிப்படையில் கள்ளநோட்டுகளை இந்தியாவுக்கு கடத்தி விநியோகித்து வந்ததும் தெரிய வந்தது. அண்மைக் காலமாக ரவிச்சந்திரனுக்கு மலேசியாவின் கோலாலம்பூரைச் சோ்ந்த டா.புவனேஸ்வரி (48), பரிமளா ஆகிய இரு பெண்கள் கள்ளநோட்டுக்களை வழங்குவதும், இந்த பெண்கள் மலேசியாவில் இருந்து அடிக்கடி சென்னை வந்து கள்ளநோட்டுக்களை ரவிச்சந்திரனிடம் வழங்கி வந்ததும், அண்மையில் இந்த பெண்கள் ரூ.1 கோடி கள்ளநோட்டுக்களை வழங்கியிருப்பதும் தெரிய வந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து போலீஸாா், சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த புவனேஸ்வரியை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விடுதியில் இருந்து தப்பியோடிய பரிமளாவை போலீஸாா் தேடி வருகின்றனா்.
இந்த கும்பலுக்கும், மலேசியாவில் செயல்படும் சா்வதேச கள்ளநோட்டு கும்பலுக்கும் இடையே உள்ள தொடா்பு குறித்து சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.