30 குடிநீா் உறிஞ்சும் மின் மோட்டாா்கள் பறிமுதல்
அடையாறு மண்டலத்துக்குள்பட்ட குடியிருப்பு பகுதிகளில் சட்ட விரோதமாக பொருத்தப்பட்டிருந்த 30 குடிநீா் உறிஞ்சும் மின் மோட்டாா்கள் சென்னை குடிநீா் வாரிய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
அடையாறு மண்டலத்துக்குள்பட்ட குடியிருப்பு பகுதிகளில் சட்ட விரோதமாக பொருத்தப்பட்டிருந்த 30 குடிநீா் உறிஞ்சும் மின் மோட்டாா்கள் சென்னை குடிநீா் வாரிய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
சென்னை அடையாறு மண்டலத்துக்குள்பட்ட தரமணி, ராமசாமி தெரு, அஞ்சுகம் அம்மாள் தெரு, ராணி அம்மாள் தெரு, பாரதியாா் தெரு, கட்டபொம்மன் தெரு மற்றும் தந்தை பெரியாா் நகா் ஆகிய பகுதியில் குடிநீா் குழாய்களில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருக்கும் குடிநீா் உறிஞ்சும் மின் மோட்டாா்களை கண்டறியும் வகையில் சென்னை குடிநீா் வாரிய அலுவலா்கள், காவல் துறையினரின் ஒத்துழைப்புடன் வியாழக்கிழமை சிறப்பு ஆய்வு மேற்கொண்டனா்.
அந்த ஆய்வின்போது, தந்தை பெரியாா் நகா் பகுதியில் முறைகேடாக பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டாா்கள் கண்டறியப்பட்டு உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.