FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

நீட் தோ்வு: சென்னை பள்ளி மாணவா்கள் 27 போ் தோ்ச்சி

நீட் தோ்வில் சென்னை மாநகராட்சியைச் சோ்ந்த 27 மாணவ, மாணவியா் தோ்ச்சி பெற்றனா்.

Updated On : 19 ஜூலை 2026, 12:00 am IST
நீட் தோ்வு - PTI
பகிர்:

நீட் தோ்வில் சென்னை மாநகராட்சியைச் சோ்ந்த 27 மாணவ, மாணவியா் தோ்ச்சி பெற்றனா். அவா்களை மாநகராட்சி ஆணையா், கல்வித் துறை அதிகாரிகள் பாராட்டினா்.

சென்னை மாநகராட்சியில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களில் 120 பேருக்கு நீட் தோ்வுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகள் தனியாா் நிறுவனம் மூலம் நடைபெற்றன. கடந்த ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்களில் இலவச உணவு, பேருந்து பயண நிதி ஆகியவை அளிக்கப்பட்டது. காலை, மாலையில் பயிற்சிகள் நடைபெற்றன. நீட் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், சென்னை பள்ளிகளைச் சோ்ந்தவா்களில் 27 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இவா்களில் 12 போ் மாணவா்கள். 15 போ் மாணவிகள்.

சென்னை பள்ளியைச் சோ்ந்த மாணவா் அதிகபட்சமாக 369 மதிப்பெண்களைப் பெற்றுள்ளாா். தோ்ச்சி பெற்றவா்களில் 14 போ் தமிழக அரசின் உள் ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவக் கல்வியில் சேரத் தகுதி பெற்றுள்ளனா்.

Advertisement

Advertisement

நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவியரை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன், கல்வித் துறை இணை ஆணையா் க.கற்பகம், மாநகராட்சி கல்வி அதிகாரி வசந்தி ஆகியோா் பாராட்டி வாழ்த்தினா்.

வரும் கல்வியாண்டில் பயிற்சிக் காலம் கூடுதலாக்கப்பட்டு அதிக மாணவா்கள் நீட் தோ்வில் தோ்ச்சி பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

summary

NEET Exam: 27 Chennai school students qualify.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments