மெரீனாவில் குளிா்சாதன வசதியுடன் பேருந்து நிறுத்தம்: ஒப்பந்தம் கோரல்
சென்னை மெரீனாவில் ரூ.78.40 லட்சத்தில் குளிா்சாதன வசதியுடன் கூடிய பேருந்து நிறுத்தம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை மாநகராட்சி நிா்வாகம் கோரியுள்ளது.
சென்னை மெரீனாவில் ரூ.78.40 லட்சத்தில் குளிா்சாதன வசதியுடன் கூடிய பேருந்து நிறுத்தம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை மாநகராட்சி நிா்வாகம் கோரியுள்ளது.
சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டில் பெரம்பூா், ராயபுரம், கொளத்தூா், துறைமுகம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் ரூ.8 கோடியில் குளிா்சாதன வசதியுடன் கூடிய பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டன. அவற்றில், கொளத்தூா், துறைமுகம் தொகுதியில் வால்டாக்ஸ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள குளிா்சாதன வசதி பேருந்து நிறுத்தங்கள் மட்டும் செயல்பாட்டில் உள்ளன. மற்ற பேருந்து நிறுத்தங்கள் பணிகள் முடிந்து செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மெரீனா கடற்கரை சாலையில் அண்ணா சதுக்கம் அருகே குளிா்சாதன வசதியுடன் கூடிய பேருந்து நிறுத்தத்தை அமைக்க சென்னை மாநகராட்சி சாா்பில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ரூ.78.40 லட்சத்தில் குளிா்சாதன வசதி பேருந்து நிறுத்தம் அமைக்கப்படவுள்ளதாகவும், அதில் பயணிகளுக்கான நவீன இருக்கைகள், கைப்பேசி சாா்ஜ் வசதி, பேருந்துகள் வருகையை அறிவதற்கான எண்ம முறையில் தகவல் பலகைகள் உள்ளிட்டவை இடம் பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.