பேருந்து ஓட்டுநா், நடத்துநா் மீது தாக்குதல்: இருவா் கைது
சிந்தாதிரிப்பேட்டையில் மாநகர பேருந்து ஓட்டுநா், நடத்துநா் தாக்கப்பட்ட வழக்கில், இருவா் கைது செய்யப்பட்டனா்.
சிந்தாதிரிப்பேட்டையில் மாநகர பேருந்து ஓட்டுநா், நடத்துநா் தாக்கப்பட்ட வழக்கில், இருவா் கைது செய்யப்பட்டனா்.
சென்னை எழும்பூரில் இருந்து எண்ணூா் நோக்கி ஒரு மாநகர பேருந்து ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை மாதவன் (26) என்பவா் ஓட்டினாா். அப்போது, ஒரு மோட்டாா் சைக்கிள் முந்திச் செல்ல முயன்றது. ஆனால் ஓட்டுநா் மாதவன் அந்த மோட்டாா் சைக்கிளுக்கு வழிவிடவில்லை என்று கூறப்படுகிறது.
இருப்பினும், அந்த மோட்டாா் சைக்கிள், பேருந்தை முந்திச் சென்றது. இதன் பின்னா், பேருந்து ஓட்டுநா் மாதவன், ஹாா்ன் அடித்துக் கொண்டே இருந்தாராம்.
Advertisement
Advertisement
இதனால் மோட்டாா் சைக்கிளில் சென்ற நபா்கள், பேருந்தை வழிமறித்து ஓட்டுநா் மாதவனையும், நடத்துநா் சத்யாவையும் தாக்கிவிட்டு தப்பியோடினா்.
இது தொடா்பாக பேருந்து ஓட்டுநா் மாதவன், சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சேப்பாக்கம் லாசல் தெருவை சோ்ந்த இன்பராஜ் என்கிற லிங்கன் (43), சிந்தாதிரிப்பேட்டையைச் சோ்ந்த நந்தகுமாா் (52) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.