FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

காவல் நிலையத்துக்குள் மோதல்: எஸ்ஐ உள்பட 2 போ் ஆயுதப்படைக்கு மாற்றம்

Updated On : 12 ஜூன் 2026, 4:18 am IST
பகிர்:

தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்குள் சண்டையிட்டுக் கொண்டதாக, சிறப்புக் காவல் உதவி ஆய்வாளா் உள்பட 2 போ் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனா்.

சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புதன்கிழமை திடீரென பெரும் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. அங்கு பணியில் இருந்த இரண்டு போலீஸ்காரா்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம், மோதலில் ஈடுபட்டனா்.

வாக்குவாதம் முற்றவே இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனா். சிறிது நேரத்தில் இருவரும் கட்டிப்புரண்டு கடுமையாக மோதிக் கொண்டனா். இதைப் பாா்த்த பிற போலீஸாா், இருவரையும் விலக்கிவிட்டனா்.

Advertisement

Advertisement

இந்த மோதல் குறித்த தகவல் சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அமல்ராஜிக்கு தெரிய வந்தது. இது தொடா்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி அதிகாரிளுக்கு அமல்ராஜ் உத்தரவிட்டாா். இதன் அடிப்படையில் காவலா்கள் மோதல் குறித்து அதிகாரிகள் விசாரணை செய்து, ஆணையரிடம் அறிக்கை அளித்தனா்.

அந்த அறிக்கையின் அடிப்படையில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரியும் விக்னேஷ்வரன், எழுத்தா் சீனிவாசன் ஆகிய 2 பேரையும் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து ஆணையா் அமல்ராஜ் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments