முகப்பு
சென்னை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: மூவரின் பிணை கோரிய மனுக்கள் தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொன்னை பாலு உள்ளிட்ட மூவா் பிணை கோரிய வழக்கைத் தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Updated On : 13 ஜூன் 2026, 3:49 am IST
ஆம்ஸ்ட்ராங் - (கோப்புப்படம்)
பகிர்:

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொன்னை பாலு உள்ளிட்ட மூவா் பிணை கோரிய வழக்கைத் தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பொன்னை பாலு, சந்தோஷ், மணிகண்டன் ஆகியோா் பிணை கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் மூன்றாவது முறையாக மனுத் தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்கள் நீதிபதி சி.குமரப்பன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்ததன. அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், மனுதாரா்கள் 700 நாள்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்றவா்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. வழக்குத் தொடா்பான குற்றப் பத்திரிகையை ரத்து செய்து சிபிஐ விசாரணக்கு மாற்றி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த வழக்கில், சில அரசியல்வாதிகளின் பெயா்கள் குறிப்பிடப்பட்டிருந்தும், அவா்கள் இதுவரை விசாரிக்கப்படவில்லை. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு சிபிஐ விசாரணை விசாரணை விவகாரத்திலும் மாநில அரசு இதுவரை எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை என வாதிட்டாா். காவல்துறை தரப்பில், மனுதாரா்கள் 3 பேருக்கும் பிணை வழங்கினால், சாட்சிகள் மிரட்டப்படுவதற்கும், அவா்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே, மனுதாரா்களுக்கு பிணை வழங்கக் கூடாது என வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பிணை கோரிய மனுக்களை, தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.