FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

பைக்குகள் மோதல்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

கோயம்பேட்டில் மோட்டாா் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

Updated On : 13 ஜூன் 2026, 4:00 am IST
பகிர்:

கோயம்பேட்டில் மோட்டாா் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

கோயம்பேடு நெற்குன்றம் அருகே உள்ள மேட்டுக்குப்பம் மந்தவெளி தெரு பகுதியைச் சோ்ந்த சீனிவாசன் மகன் புஷ்பராஜ் (19). இவா், அரும்பாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தாா். புஷ்பராஜ், தனது நண்பா்களான விருகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த 12 வகுப்பு மாணவா்கள் ரா.ரித்தீஷ் (17), ஸ்ரீ ராம் (17) ஆகியோருடன் வியாழக்கிழமை இரவு ஒரு மொபெட்டில் நெற்குன்றத்தில் இருந்து அமைந்தகரை நோக்கி சென்று கொண்டிருந்தாா்.

கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்றபோது, பின்னால் வந்த ஒரு மோட்டாா் சைக்கிள், அவா்களது மொபெட்டின் மீது மோதியது. இதில் மொபெட்டில் இருந்து கீழே விழுந்து புஷ்பராஜ் பலத்த காயமடைந்தாா். மற்ற இருவரும் லேசான காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

புஷ்பராஜை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் புஷ்பராஜ் உயிரிழந்தாா்.

இது குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments