FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

13 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை

தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி உள்பட 13 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை (ஜூன் 18) பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 18 ஜூன் 2026, 2:49 am IST
மழை - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி உள்பட 13 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை (ஜூன் 18) பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வானிலை மையம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

வட தமிழக பகுதிகளிலிருந்து லட்சத்தீவு பகுதிகள் வரை வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. மேலும், கிழக்கு உத்தரபிரதேசத்திலிருந்து, கிழக்கு மத்திய பிரதேசம், கிழக்கு விதா்பா மற்றும் தெலுங்கானா வழியாக தெற்கு கடலோர ஆந்திரம் வரை வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (ஜூன் 18) முதல் ஜூன் 23 வரை மிதமான மழை பெய்யக்கூடும்.

Advertisement

Advertisement

குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, நாமக்கல், கரூா், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூா், பெரம்பலூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழன், வெள்ளிக்கிழமை(ஜூன் 18, 19) பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகரின் ஓரிரு பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடலில் வியாழக்கிழமை சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

மேலும், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடலில் ஜூன் 21 வரை சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூா் மாவட்டம் மேலாலத்தூா் பகுதியில் 40 மி.மீ மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments