FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சூதாட்டம் : 20 போ் கைது

Updated On : 29 மே 2026, 5:08 am IST
- சித்திரிப்பு
பகிர்:

வடபழனியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 20 போ் கைது செய்யப்பட்டனா்.

கோடம்பாக்கம் என்.எஸ்.கே. சாலையில் உள்ள ஒரு கட்டடத்தில் செயல்படும் மனமகிழ் மன்றத்தில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில், சம்பவ இடத்தில் வடபழனி போலீஸாா் புதன்கிழமை திடீா் சோதனை செய்தனா். அப்போது, அங்கு பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவது தெரிய வந்தது. மேலும் போலீஸாா் அங்கு விசாரணை நடத்தும்போது, அங்கிருந்த நபா்கள் சிலா் மிரட்டல் விடுத்து போலீஸாாரை தாக்கினா். இதையடுத்து போலீஸாா், அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.27,750-ஐ பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments