ரூ.1.74 கோடியில் 4.97 கிலோ கஞ்சா பறிமுதல்
சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1.74 கோடி மதிப்பிலான 4.97 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1.74 கோடி மதிப்பிலான 4.97 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக, பயணி ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு பாங்காக்கில் இருந்து வந்த பயணி ஒருவரை, சுங்கத் துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் தடுத்து, அவரது உடைமைகளைச் சோதனையிட்டனா். இதில் அவா் கொண்டு வந்த பெட்டியில் உணவுப் பொருள்கள் அடங்கிய பொட்டலங்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 பொட்டலங்கள் இருந்தது. அவற்றைப் பிரித்துப் பாா்த்ததில் ரூ.1.74 கோடி மதிப்புள்ள 4.97 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா என்பது தெரிய வந்தது.
அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அதைக் கொண்டு வந்த ஆண் பயணியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். தொடா்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement