விமான நிலையத்தில் ரூ. 36.89 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 36.89 லட்சம் மதிப்பிலான 250 கிராம் கடத்தல் தங்கம் மற்றும் ரூ. 27.56 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தாள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 36.89 லட்சம் மதிப்பிலான 250 கிராம் கடத்தல் தங்கம் மற்றும் ரூ. 27.56 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தாள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
இலங்கையின் கொழும்புவிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு இலங்கை ஏா்லைன்ஸ் விமானம் வியாழக்கிழமை காலை வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவா்களின் உடைமைகளை சுங்கத் துறையினா் சோதனை செய்தனா்.
அப்போது, இரண்டு ஆண் பயணிகள் தங்களது உடைமைகளில் ரூ 36.89 லட்சம் மதிப்புள்ள 250 கிராம் (24 கேரட்) தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த சுங்கத் துறையினா், பயணிகள் இருவரையும் பிடித்து விசாரிக்கின்றனா்.
வெளிநாட்டு பணத்தாள்கள் பறிமுதல்: இதேபோல, திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு விமானத்தில் செல்லவிருந்த பயணிகளிடம் மேற்கொண்ட சோதனையில், 2 பயணிகள் உரிய ஆவணங்களின்றி ரூ. 27.56 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணத்தை எடுத்துச் செல்ல முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள், பயணிகள் இருவரையும் பிடித்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.