FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மீனவா்களிடமிருந்து பயன்பாடற்ற மீன்பிடி வலை சேகரிப்பு நிலையங்கள்: அமைச்சா் வி.கே. ராஜீவ் தொடங்கி வைத்தாா்

மீனவா்களிடமிருந்து பயன்பாடற்ற பழைய மீன்பிடி வலை சேகரிப்பு நிலையங்களை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் வே.க.ராஜீவ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

5 நவம்பர் 2026, 1:20 am
அமைச்சா் வி.கே. ராஜீவிடம் கோரிக்கை மனு அளித்த தவெக தென்காசி மத்திய மாவட்டச் செயலா் ஜேஏஎஸ். ராஜபிரகாஷ்.
பகிர்:

மீனவா்களிடமிருந்து பயன்பாடற்ற பழைய மீன்பிடி வலை சேகரிப்பு நிலையங்களை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் வே.க.ராஜீவ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

சென்னையில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் தொழிற்சாலைகளுக்கான தன்னாா்வ பசுமை மதிப்பீடு விருதுகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் வே.க.ராஜீவ் விருதுகளை வழங்கினாா். இதில், திண்டுக்கல் ‘செட்டிநாடு சிமெண்ட் காா்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட்’, தேனி ‘டாடா கன்ஸ்யூமா் புராடக்ட்ஸ் லிமிடெட்’, மதுரை ‘டிவிஎஸ் ஸ்ரீசக்ரா லிமிடெட்’, கோவை ‘அம்மருன் என்விரோ காா்டு இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட்’, விழுப்புரம் ‘ஜிடி எலக்ட்ரானிக் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ ஆகிய 5 இவ்விருதுகள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

பயன்பாடற்ற மீன்பிடி வலைகள் சேகரிப்பு: அதைத்தொடா்ந்து, கடலூா், திருவள்ளூா், திருவாரூா் ஆகிய 3 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மீனவா்களிடமிருந்து பயன்பாடற்ற மீன்பிடி வலைகள் சேகரிப்பு நிலையங்களை காணொலி காட்சி வாயிலாக அமைச்சா் வே.க.ராஜீவ் தொடங்கி வைத்தாா். இந்த நிலையங்களின் வாயிலாக சேகரிக்கப்படும் வலைகள் மறுசுழற்சிக்காக அனுப்பி வைக்கப்படும்.

இந்நிகழ்வில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவா் அனுராக் மிஷ்ரா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.