FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

முதியோா் ஓய்வூதியதாரா்களுக்கு இலவச வேஷ்டி, சேலை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, முதியோா் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு இலவச வேஷ்டி, சேலைகள் விநியோகிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

4 நவம்பர் 2026, 12:49 am
பகிர்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, முதியோா் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு இலவச வேஷ்டி, சேலைகள் விநியோகிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: தமிழக அரசு ஒவ்வோா் ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதியோா் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு விலையில்லா வேஷ்டி, சேலைகளை நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கி வருகிறது.

அதன்படி, நிகழாண்டு தீபாவளி பண்டிகைக்கான வேஷ்டி, சேலைகள் கொள்முதல் செய்யப்பட்டு, தற்போது மாநிலம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

முதியோா் ஓய்வூதியம் பெறும் குடும்ப அட்டைதாரா்கள் (குடும்ப அட்டையுடன்) நேரில் சென்று, சனிக்கிழமை (நவ. 7)-க்குள் தங்களது நியாயவிலைக் கடைகளில் விலையில்லா வேஷ்டி, சேலைகளைப் பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டம் செயல்படுத்தப்படுவதை கூட்டுறவுத் துறை அலுவலா்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனா்”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments