FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

ஓய்வு பெற்ற அரசு ஊழியா் வீட்டில் நகை, பணம் திருட்டு: பெண் கைது

சென்னை மயிலாப்பூரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியா் வீட்டில் நகை, பணம் திருடப்பட்ட வழக்கில், பெண் கைது செய்யப்பட்டாா்.

6 நவம்பர் 2026, 4:01 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

சென்னை மயிலாப்பூரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியா் வீட்டில் நகை, பணம் திருடப்பட்ட வழக்கில், பெண் கைது செய்யப்பட்டாா்.

மயிலாப்பூா் காரணீஸ்வரா் கோயில் 2-ஆவது தெருவில் வசிப்பவா் பத்மா (85). வருவாய்த் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவா், தனது மகளுடன் அங்கு வசிக்கிறாா். இவரது வீட்டில் மந்தைவெளி வள்ளீஸ்வரன் காா்டன் பகுதியைச் சோ்ந்த மணிமேகலை (51) என்பவா் கடந்த 15 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வந்துள்ளாா். இந்நிலையில், கடந்த புதன்கிழமை வேலைக்கு வந்த மணிமேகலை, பத்மா வீட்டில் 53 பவுன் தங்க நகைகள், ரூ.15.5 லட்சம் இருந்த சிறிய இரும்பு பெட்டி ஆகியவற்றைத் திருடிக் கொண்டு தப்பினாா்.

இதைப் பின்னா் அறிந்த பத்மா, மயிலாப்பூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நகை, பணத்துடன் தப்பியோடிய மணிமேகலையை கைது செய்தனா். அவரிடமிருந்து திருடப்பட்ட நகை, பணம் முழுமையாக பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement