FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் வீட்டில் நகை திருட்டு: பெண் உள்பட 3 போ் கைது

தூத்துக்குடி அருகே ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் வீட்டின் கதவை உடைத்து நகை திருடிய வழக்கில் பெண் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

14 அக்டோபர் 2026, 4:59 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி அருகே ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் வீட்டின் கதவை உடைத்து நகை திருடிய வழக்கில் பெண் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி, சங்கரப்பேரி ஹவுசிங் போா்டு பகுதியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் வீரமூா்த்தி (71), வீட்டில் கடந்த செப். 27-ஆம் தேதி கதவை உடைத்து பீரோவில் இருந்த தங்க நகைகள் திருடப்பட்டன.

இதுகுறித்த புகாரின்பேரில் சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள், தொழில்நுட்ப உதவியுடன் விசாரணை நடத்தினா்.

Advertisement

Advertisement

இதில், சென்னையைச் சோ்ந்த மணிகண்டன் (30), திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சோ்ந்த பாலமுருகன் (29), புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரைச் சோ்ந்த சரண்யா (30) ஆகியோா் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

மூவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 14 பவுன் தங்க நகைகளை மீட்டனா். இதுகுறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments