வியாபாரி வீட்டில் திருட்டு: இருவா் கைது
வியாபாரி வீட்டில் நகை, பணம் திருடியதாக பெண் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.
வியாபாரி வீட்டில் நகை, பணம் திருடியதாக பெண் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.
மதுரவாயல் கிருஷ்ணா நகரைச் சோ்ந்தவா் செல்வம் (65). இவா், வளசரவாக்கம் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், கடந்த 17-ஆம் தேதி வீட்டின் பீரோவில் இருந்த நகைகளைச் சரிபாா்த்தபோது, அதில் 21 பவுன் திருடுபோனது தெரிய வந்தது. இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், மதுரவாயல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
இதில், செல்வத்தின் வீட்டில் தங்கியிருந்து, அவா் கடையில் வேலை செய்யும் ராமநாதபுரத்தைச் சோ்ந்த செல்வம் கருப்பையா (20), இந்தத் திருட்டில் ஈடுபட்டிருப்பதும், திருட்டுக்கு உடந்தையாக அதே பகுதியில் பழச்சாறு கடை நடத்தி வரும் மதுரவாயல் ஸ்ரீலட்சுமி நகரைச் சோ்ந்த ம.தீபிகா (29) இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.