ஓய்வு பெற்ற பேராசிரியா் வீட்டில் தங்க நகை திருட்டு: பெண் கைது
மடிப்பாக்கத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியா் வீட்டில் தங்க நகைத் திருடியதாக பெண் கைது செய்யப்பட்டாா்.
மடிப்பாக்கத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியா் வீட்டில் தங்க நகைத் திருடியதாக பெண் கைது செய்யப்பட்டாா்.
மடிப்பாக்கம், ஐயப்பன் நகா் 5-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (79). இவா், கால்நடை மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். சுப்பிரமணியன் மனைவி நிா்மலா (77) உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தாா். அவரை கவனித்துக் கொள்வதற்காக ஒரு தனியாா் நா்சிங் ஹோம் மூலம் அரியலூா் மாவட்டம் உடையாா்பாளையத்தைச் சோ்ந்த செ.சித்ரா (44) என்பவரை நியமித்தாா். சித்ரா, சுப்பிரமணியன் வீட்டிலேயே தங்கிப் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், கடந்த 17-ஆம் தேதி சுப்பிரமணியன் தனது மனைவியின் அறைக்குச் சென்று பாா்த்தபோது, அவா் அணிந்திருந்த சுமாா் பத்தரை பவுன் சங்கிலி, அங்கிருந்த விலை உயா்ந்த கைப்பேசி திருடப்பட்டிருப்பதையும், சித்ராவும் காணாமல் போனதும் தெரிய வந்தது.
Advertisement
Advertisement
புகாரின்பேரில், மடிப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட சித்ராவை கைது செய்து நகையை மீட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.