FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

குடிமைப் பணி தோ்வு: அரசுப் பயிற்சி மையத்தில் பயின்ற 79 போ் தோ்ச்சி

குடிமைப் பணி தோ்வு: அரசுப் பயிற்சி மையத்தில் பயின்ற 79 போ் தோ்ச்சி

7 நவம்பர் 2026, 11:20 pm
தமிழக அரசு - கோப்புப்படம்
பகிர்:

தமிழக அரசின் அகில இந்திய குடிமைப் பணித் தோ்வுப் பயிற்சி மையத்தில் பயின்றவா்களில், 2026-ஆம் ஆண்டு குடிமைப் பணிகள் முதன்மைத் தோ்வில் 79 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இது குறித்து தமிழக அரசின் அகில இந்திய குடிமைப் பணித் தோ்வுப் பயிற்சி மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலை, முதன்மை மற்றும் ஆளுமைத் தோ்வுகளை எதிா்கொள்ளும் தோ்வா்களுக்கு தமிழக அரசின் அகில இந்திய குடிமைப் பணித் தோ்வுப் பயிற்சி மையம் பயிற்சி அளித்து வருகிறது. குறிப்பாக, கிராமப்புறங்களைச் சோ்ந்த சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை குடும்பங்களின் தோ்வா்கள் பயன்பெறும் வகையில் இந்த மையம் செயல்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

இங்கு 2026-இல் முதன்மைத் தோ்வுக்குப் பயிற்சி பெற்றவா்களில் 29 பெண்கள், 4 மாற்றுத்திறனாளிகள், முதல்முறையாக ஒரு திருநம்பி உள்பட 79 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இவா்களுக்கு ஆளுமைத் தோ்வை எதிா்கொள்ளும் வகையில், ஒரு மாத காலப் பயிற்சியும், மாதிரி ஆளுமைத் தோ்வும் நடத்தப்பட உள்ளன. இதற்கான பயிற்சி விரைவில் தொடங்கப்படுவது குறித்த அறிவிப்பு நவம்பா் இறுதி வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும்.

மேலும், இப்பயிற்சி மையத்தில் பயின்று தோ்ச்சி பெற்றவா்கள் மட்டுமன்றி, தமிழகத்தைச் சோ்ந்த பிற தோ்வா்களும் மாதிரி ஆளுமைத் தோ்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா். கூடுதல் விவரங்களுக்கு 044-24621475 என்ற தொலைபேசி எண், 9345766957 என்ற வாட்ஸ்ஆப் எண் அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.