சுபாஷ் சந்திர போஸ் குடிமைப் பணித் தேர்வுகளை சமஸ்கிருதத்தில் எழுதினார்! - பிரதமர் மோடி பேச்சு!
சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் குடிமைப் பணித் தேர்வுகளை சமஸ்கிருத மொழியில் எழுதியதாக பிரதமர் மோடி பேச்சு...
சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் கடந்த 1920 ஆம் ஆண்டு குடிமைப் பணித் தேர்வுகளை சமஸ்கிருத மொழியில் எழுதியாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி இன்று (அக்.1) தில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, யுபிஎஸ்சி வரலாற்றுச் சிறப்புமிக்க கடமைகளை நிறைவேற்றியுள்ளது எனவும், இனி வரக்கூடிய 25 ஆண்டுகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இத்துடன், அங்கு அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் காட்சியைப் பார்வையிட்ட பிரதமர் மோடி கூறியதாவது:
“இந்த நூற்றாண்டு கால பயணத்தில் தலைமுறைகள் மாறிவிட்டன, அரசுகள் மாறிவிட்டன, தொழில்நுட்பம் மாறிவிட்டன, பாடத்திட்டங்களும் மாறிவிட்டன. ஆனால், யுபிஎஸ்சி மீதான நம்பிக்கை இன்றளவும் அசைக்க முடியாததாக இருக்கிறது.
புகைப்படக் காட்சியைப் பார்வையிட்டபோது, 1920 ஆம் ஆண்டு இதே நடைமுறைகளை சுபாஷ் சந்திர போஸ் பின்பற்றியது குறித்த விவரங்களையும் நான் தெரிந்துகொண்டேன்.
அந்தக் காலத்தில், ஆங்கிலேயர் ஆட்சியிலும் சமஸ்கிருதப் பாடத்தாள் ஒன்று இருந்தது என்பதும், சுபாஷ் சந்திர போஸ் தனது தேர்வை சமஸ்கிருத மொழியில் எழுதினார் என்பதும் என் கவனத்தை ஈர்த்தது” எனக் கூறியுள்ளார்.
PM Modi has stated that freedom fighter Subhash Chandra Bose took the civil services examinations in Sanskrit in 1920.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.