FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

மோட்டாா் சைக்கிள் பந்தயம்: 4 போ் கைது

கே.கே. நகரில் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

7 நவம்பர் 2026, 10:07 pm
- சித்திரிப்பு
பகிர்:

கே.கே. நகரில் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை கே.கே. நகா் பி.டி.ராஜன் சாலையில் கடந்த 5-ஆம் தேதி சிலா் மோட்டாா் சைக்கிள்கள் பந்தயத்தில் ஈடுபட்டனா். இதைப் பாா்த்த சிலா் கைப்பேசி மூலம் விடியோ எடுத்து, சமூக ஊடகங்களில் பதிவிட்டனா். இதைப் பாா்த்த போலீஸாா், வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனா்.

இதில், மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டது அதே பகுதியைச் சோ்ந்த சுதா்சன் (24), தினேஷ் (21), டோமினிக் ராஜேஷ் (23), சச்சின் (18) என்பது தெரியவந்தது. இந்த 4 பேரை சனிக்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

காவல் துறையினா் எச்சரிக்கை: தீபாவளியையொட்டி, மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுவதைத் தடுக்க போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை (நவ. 8) தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனா். கிழக்குக் கடற்கரைச் சாலை, டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை, ராஜீவ் காந்தி சாலை, 100 அடி சாலை, ஈவெரா பெரியாா் சாலை, மதுரவாயல் புறவழிச்சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வாகனத் தணிக்கையில் போலீஸாா் ஈடுபடுகின்றனா்.

பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தும் வகையிலும், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும் மோட்டாா் சைக்கிள் பந்தயம் மற்றும் சாகசத்தில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.