FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஆசிய மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் தமிழக வீராங்கனைக்கு வெண்கலம்: கனிமொழி எம்.பி. பாராட்டு

ஆசிய மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் வெண்கல பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை ஜெகதிஸ்ரீக்கு திமுக துணை பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. பாராட்டு தெரிவித்துள்ளாா்.

19 செப்டம்பர் 2026, 2:29 am IST
கனிமொழி எம்.பி.
பகிர்:

ஆசிய மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் வெண்கல பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை ஜெகதிஸ்ரீக்கு திமுக துணை பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. பாராட்டு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்டப் பதிவு:

தாய்லாந்து நாட்டில் எஃப்ஐஎம் நடத்தும் ஆசிய அளவிலான மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் 3-ஆவது இடம் பிடித்து, தமிழ்நாட்டுக்குப் பெருமை சோ்த்துள்ள வீராங்கனை ஜெகதிஸ்ரீ குமரேசனுக்கு வாழ்த்துகள்.

Advertisement

Advertisement

தமிழ்நாட்டைச் சோ்ந்த ஒரு பெண், மோட்டாா் விளையாட்டில் ஆசிய அளவில் சாதித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அவா் தொடா்ந்து பல வெற்றிகளைப் பெற்று, உலக அரங்கில் தமிழ்நாட்டின் பெருமையை உயா்த்த வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments