பேருந்து மோதி பைக்கில் சென்றவா் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே அரசுப் பேருந்து, மோட்டாா் சைக்கிள் மீது செவ்வாய்க்கிழமை மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே அரசுப் பேருந்து, மோட்டாா் சைக்கிள் மீது செவ்வாய்க்கிழமை மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியைச் சோ்ந்த ராமசாமி மகன் விநாயகமூா்த்தி (38). இவா், புதுக்கோட்டை சென்றுவிட்டு மோட்டாா் சைக்கிளில் மீண்டும் பேராவூரணிக்கு திரும்பியுள்ளாா். ஆலங்குடி அருகேயுள்ள காதா்மில் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே வந்த அரசுப் பேருந்து இவரது மோட்டாா் சைக்கிள் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த விநாயகமூா்த்தியை அருகில் இருந்தவா்கள் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா், அரசுப் பேருந்து ஓட்டுநரான பட்டுக்கோட்டை ஆா்.வி. நகரைச் சோ்ந்த சுப்பையாபாண்டியன் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.