FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

10 ஆண்டுகளாக ஒரே மாதிரியான உணர்வுகள்... நெகிழ்ச்சி அடைந்த மனு பாக்கர்!

ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கரின் பதிவு குறித்து...

16 செப்டம்பர் 2026, 8:24 pm IST
இந்திய வீராங்கனை மனு பாக்கர் - படம்: இன்ஸ்டா / மனு பாக்கர்
பகிர்:

ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கர் (24 வயது) ஆசிய கோப்பை 2026 குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

ஜப்பானின் அய்சி - நகோயா நகரில் வரும் 19-ஆம் தேதி தொடங்கும் 20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவிலிருந்து 267 வீரா்கள், 234 வீராங்கனைகள் என, 501 போ் கொண்ட குழு பங்கேற்கிறது.

இந்தத் தொடரில் 36 விளையாட்டுப் பிரிவுகளில் இந்தியர்கள் களம் காணவுள்ளனர். இதில் 310 பேருக்கு இது அறிமுக ஆசிய போட்டிகளாக இருக்கிறது.

Advertisement

Advertisement

ஆசிய போட்டிகளில் மனு பாக்கர் 2 ஒலிம்பிக் பதக்கங்கள், 23 உலக சாம்பியன்ஷிப் பதக்கங்கள், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 12 பதக்கங்கள் என குவித்துள்ளார்.

இந்த நிலையில், ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனை மனு பாக்கர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியுள்ளதாவது:

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026, ஜப்பான்

பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்தப் பயணத்தில் இருக்கிறேன். இருப்பினும் அந்தப் பெருமை, ஆர்வம், எனது வீட்டை பிரதிநிதித்துவப்படுத்தி இந்திய ஜெர்ஸியை அணிந்து விளையாடுவது என அந்த உணர்வுகள் அப்படியேத்தான் இருக்கின்றன.

இதனை எப்போதும் சிறப்புச் சலுகையாகவும் ஆசிர்வதிக்கப்பட்டவளாகவும் உணர்கிறேன். நன்றி எனக் கூறியுள்ளார்.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பல தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்து தேர்வர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. மனு பாக்கர் எந்தத் தேர்வு எனக் குறிப்பிடாத நிலையில் அது ஒட்டுமொத்தமாக இந்தியாவில் ஏற்படும் குழப்பங்களைப் பதிவு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

summary

More than 10 years into this journey, Asian Games 2026 Manu Bhaker

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments