FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

வினாத்தாள்கள் கசிவு... மனமுடைந்த மனு பாக்கர்!

ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கரின் எக்ஸ் பதிவு குறித்து...

Updated On : 18 ஜூலை 2026, 4:51 pm IST
மனு பாக்கர். - படம்: எக்ஸ் / மனு பாக்கர்.
பகிர்:

ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற இந்தியாவின் நட்சத்திர துப்பாக்கி சுடும் வீராங்கனை மனு பாக்கர் தனது எக்ஸ் பக்கத்தில், “நமது நாட்டின் குழந்தைகளின் மாணவர்களின் எதிர்காலம் குறித்து பேசுகிறேன்” எனக் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பல தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்து தேர்வர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. மனு பாக்கர் எந்தத் தேர்வு எனக் குறிப்பிடாத நிலையில் அது ஒட்டுமொத்தமாக இந்தியாவில் ஏற்படும் குழப்பங்களைப் பதிவு செய்துள்ளார்.

ஹரியாணாவைச் சேர்ந்தவர் மனு பாக்கர். அங்கும் இந்தாண்டு ஹெச்டெட் (HTET) எனப்படும் ஆசிரியர்களுக்கான தேர்வில் குழறுபடிகளால் ரத்து செய்யப்பட்டது. மேலும் அங்கு பல மாவட்டங்களில் பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பு வினாத்தாள்களும் கசிந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

ஜந்தர் மந்தரில் நீட் வினாத்தாள் கசிவுக்கு சிஜேபி (கரப்பான்பூச்சி மக்கள் கட்சி) போராட்டம் நடத்து வருகிறந்து. இந்த நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் வீராங்கனை மனு பாக்கர் கூறியிருப்பதாவது:

இது நமது நாட்டின் வருங்கால மக்களின் நிலைமையைப் பற்றியது. இது நம்மைப் பற்றியது.

நான் ஒரு மாணவி, ஒரு நேரத்தில் நாம் அனைவருமே மாணவ/மாணவிகள்தான். ஒவ்வொரு குழந்தையும் கல்வி, பாதுகாப்புக்கு சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும். அது சிறப்புச் சலுகையாக அல்லாமல் அடிப்படை உரிமையாக இருக்க வேண்டும்.

மாணவர்கள், குழந்தைகள் தங்கள் வாழ்க்கையை இழப்பது என்பது நாட்டின் வருங்காலத்தை இழப்பதுபோன்றது. அவர்களின் கனவு, ஆற்றல், வருங்காலம் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும்.

இது எந்தவொரு அரசியல் கட்சியை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ பற்றியதல்ல. கல்வி, சுற்றுச் சூழல், பாதுகாப்பு, பொறுப்பேற்பு என உண்மையிலேயே என்ன வேண்டுமோ அதைப் பற்றியது. நமது நம்பிக்கைகளைத் தாண்டி இது நம் அனைவரையும் பாதிக்கிறது.

எனது நாட்டைப் பிரதிநிதித்துவம் படுத்துவதில் பெருமைப்படுகிறேன். அதனால், மாணவர்கள் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது மிகவும் மனமுடைகிறேன். நாம் அவர்களுக்காக கடன்பட்டிருக்கிறோம். எந்த பயமும் இல்லாமல் நாம் ஒவ்வொரு குழந்தைகளின் கற்றல் திறன், உயர்வு, அவர்களின் கனவுகளை அடைய கடன்பட்டிருக்கிறோம் என்றார்.

summary

Olympian Manu Bhaker voices concern amid exam paper leak protests

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments