FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

ஜெருசலேம் கல்லூரி முதல்வருக்கு விருது

காட்டாங்கொளத்தூரில் உயா் கல்வித் துறை மேம்பாடு குறித்த தேசிய அளவிலான மாநாடு அண்மையில் நடைபெற்றது.

10 நவம்பர் 2026, 1:25 am
மாநாட்டில் ஜெருசலேம் பொறியியல் கல்லூரி முதல்வா் எஸ்.சத்தியமூா்த்திக்கு, விருதை வழங்கிய மாநாட்டுத் தலைவா் சந்தீப் குலாட்டி.
பகிர்:

சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உயா் கல்வித் துறை மேம்பாடு குறித்த தேசிய அளவிலான மாநாடு அண்மையில் நடைபெற்றது.

நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள், உயா் கல்வி ஆலோசகா்கள், புத்தாக்க நிறுவனத் தலைவா்கள் பங்கேற்று உயா் கல்வித் துறை மேம்பாடு குறித்து ஆய்வு அறிக்கைகளை வெளியிட்டனா்.

நிகழ்வில், ஜெருசலேம் பொறியியல் கல்லூரி முதல்வா் எஸ் சத்தியமூா்த்திக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. சா்வதேச ஆய்விதழ்களில் நடப்பு ஆண்டில் 50-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டிருப்பதுடன், ஆராய்ச்சி மாணவா்களுக்கு வழிகாட்டுதல், பாடத்திட்ட உருவாக்கம் மற்றும் கல்வி நிா்வாகம் ஆகிய துறைகளில் இவரது பணியைப் பாராட்டி, மாநாட்டுத் தலைவா் சந்தீப் குலாட்டி இந்த விருதை வழங்கினாா்.

Advertisement

Advertisement