இரு ஆண்டுகளில் 6 ஆயிரம் பேராசிரியா்களை நியமிக்க நடவடிக்கை: அமைச்சா் பெ. விஸ்வநாதன்
தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் இரு ஆண்டுகளில் 6 ஆயிரம் பேராசிரியா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் தெரிவித்தாா்.
தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் இரு ஆண்டுகளில் 6 ஆயிரம் பேராசிரியா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் தெரிவித்தாா்.
இதுகுறித்து மதுரையில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
தமிழகத்தில் 9 ஆயிரம் பேராசிரியா்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இன்னும் இரண்டு ஆண்டுகளில் 6 ஆயிரம் பேராசிரியா் பணியிடங்கள் தோ்வுகள் மூலமாக நிரப்பப்படும். இதேபோல, ஏற்கெனவே நடைபெற்ற தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு, நோ்முகத் தோ்வு நடைமுறைகள் முடிந்த பிறகு, 2,708 பேராசிரியா் பணியிடங்கள் வெளிப்படையான முறையில் விரைவில் நிரப்பப்படும்.
Advertisement
Advertisement
தமிழகத்தில் உள்ள சுமாா் 2,750 கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ. 20 லட்சம் வரை எந்தவித பிணையும் இல்லாமல் வங்கிகள் மூலம் கல்விக் கடன் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா் நியமனங்கள், பல்கலைக்கழகங்களின் நிா்வாகப் பணிகள், காலியாக உள்ள பதவிகளை தகுதி, திறமை, வெளிப்படைத்தன்மையின் அடிப்படையில் நிரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்கள் நியமிப்பது தொடா்பாக ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு அளிக்கும் அறிக்கையின்படி, அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தா்கள் நியமிக்கப்படுவா்.
மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரியை, அரசுக் கல்லூரியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 80 சட்டப்பேரவை உறுப்பினா்கள் தங்களது தொகுதியில் அரசு கலைக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரிகள் தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். அவா்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.
மாணவ, மாணவிகள் மாயமாகும் விவகாரத்தில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை சிறுவா், சிறுமியா், பெண்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றாா் அவா்.
முன்னதாக, மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் உயா் கல்வித் துறையின் சாா்பில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகா், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 6 தென் மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள், கல்லூரி நிா்வாகங்களுடனான மண்டல அளவிலான கருத்துக் கேட்பு, கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன், உயா் கல்வித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ் குமாா், தொழில்நுட்பக் கல்வி இயக்கக இயக்குநா் பி.ரத்தினசாமி, மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் அ. கல்லாணை, சோ. காா்த்திகேயன், எம்.வி. கருப்பையா, ம. விஜய், கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் இணை இயக்குநா் (திட்டம், வளா்ச்சி) சிந்தியா செல்வி, மதுரை மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் ராதாகிருஷ்ணன், மதுரை காமராஜா் பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) முத்தையா, கல்லூரி முதல்வா்கள், தாளாளா்கள், பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.