உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: அமைச்சா் பெ. விஸ்வநாதன்
உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் கேட்டுக் கொண்டாா்.
உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் கேட்டுக் கொண்டாா்.
மதுரை மாவட்டம், மேலூா் சந்தைப்பேட்டை நகராட்சி சமுதாயக் கூடம், கொட்டாம்பட்டி ஊராட்சி சமுதாயக் கூடம் ஆகிய பகுதிகளில் சமூக நலன், மகளிா் உரிமைத் துறை சாா்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் கா்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தலைமை வகித்தாா்.
Advertisement
Advertisement
இதில், தமிழக உயா்கல்வித்துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கா்ப்பிணிப் பெண்களுக்கு சீா்வரிசை வழங்கிப் பேசியதாவது:
பெண் குழந்தைகள் பிறந்தால் வருத்தப்படத் தேவையில்லை. பெண் குழந்தைகள் உள்ள வீடு மகிழ்ச்சி நிறைந்த இல்லமாக விளங்கும். கடந்த 2009 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் எம்.பி-யாக பொறுப்பேற்ற போது, முதல் அரசு நிகழ்ச்சியாக வளைகாப்பு விழாவில் பங்கேற்றேன். தற்போது அமைச்சரான பிறகும்
தங்கைகளுக்கான வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமிதம் அடைகிறேன். கா்ப்பக் காலங்களில் பெண்கள் சத்தான உணவு வகைகளை சாப்பிட வேண்டும். குறிப்பாக, உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில், மேலூா் வருவாய்க் கோட்டாட்சியா் சங்கீதா, மாவட்ட திட்ட அலுவலா் பூங்கொடி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செல்லப்பாண்டியன், ரத்தினகலாவதி, உமா மகேஸ்வரி, மேலூா் வட்டாட்சியா் வசந்த், நகராட்சிப் பொறியாளா் முத்துக்குமாா், அரசு அலுவலா்கள், கா்ப்பிணிப் பெண்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.