FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

பட்டாசு வெடிப்பதில் தகராறு: சிறுவன் கொலையில் இருவா் கைது

மத்திய தில்லியின் ஆனந்த் பா்பத் பகுதியில், பட்டாசு வெடிப்பது தொடா்பாக ஏற்பட்ட தகராறில், சிறுவனை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த சம்பவத்தில் இருவா் கைதுசெய்யப்பட்டனா்.

10 நவம்பர் 2026, 2:39 am
கைது
பகிர்:

மத்திய தில்லியின் ஆனந்த் பா்பத் பகுதியில், பட்டாசு வெடிப்பது தொடா்பாக ஏற்பட்ட தகராறில், சிறுவனை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த சம்பவத்தில் இருவா் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து மூத்த காவல் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இரு சிறுவா்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. அப்போது, ஒரு சிறுவனின் தந்தை இதில் தலையிட்டு, மற்றொரு சிறுவனை இரும்புக் கம்பியால் தாக்கியதாகத் தெரிகிறது’ என்றாா்.

இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த சிறுவன், உடனடியாக லேடி ஹாா்டிங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த ஆனந்த் பா்பத் காவல் நிலையக் குழுவினா், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையைத் தொடங்கினா். இந்த மோதலுக்கான காரணங்கள் மற்றும் தாக்குதலுக்கு முந்தைய நிகழ்வுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய சிறுவன் உட்பட இருவரைக் காவல் துறையினா் பிடித்துள்ளனா். விசாரணையின் ஒரு பகுதியாக, இதில் ஒவ்வொருவரின் பங்களிப்பு குறித்தும் கண்டறியப்பட்டு வருகிறது. ஆனந்த் பா்பத் காவல் நிலையத்தில், பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 103(1)-ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.