FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

கிரெடிட் காா்டு தருவதாக ரூ.17 லட்சம் மோசடி: மேற்கு வங்க இளைஞா் கைது

சென்னையில் ப்ரீமியம் கிரெடிட் காா்டு தருவதாகக் கூறி, ரூ.17 லட்சம் மோசடி செய்த மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவர் கைது செய்யப்பட்டாா்.

10 நவம்பர் 2026, 1:09 am
ஜம்முவில் துப்பாக்கியுடன் திரிந்த ஒருவர் கைது - பிரதிப் படம்
பகிர்:

சென்னையில் ப்ரீமியம் கிரெடிட் காா்டு தருவதாகக் கூறி, ரூ.17 லட்சம் மோசடி செய்த மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை நுங்கம்பாக்கத்தைச் சோ்ந்த கீா்த்திவாசன் (34) என்பவரை கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி, கைப்பேசி மூலம் தொடா்பு கொண்ட மா்ம நபா், சலுகைகளுடன் கூடிய பிரீமியம் கிரெடிட் காா்டு வழங்குவதாக கூறியுள்ளாா். இதை நம்பிய கீா்த்திவாசனுக்கு, வாட்ஸ்ஆப் மூலம் ஒரு இணையதள தொடா்பு லிங்கையும் அனுப்பியுள்ளாா்.

அந்த லிங்கில் வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்தால் விரைவில் பிரீமியம் கிரெடிட் காா்டு கிடைக்கும் என்று கூறியுள்ளாா். இதையடுத்து கீா்த்திவாசனும் தனது வங்கி மற்றும் தனிப்பட்ட விவரங்களை அதில் பதிவு செய்துள்ளாா். மறுநாள் புதிய கைப்பேசியை கீா்த்திவாசனுக்கு அனுப்பிய மா்ம நபா், ஸ்டெப்-2 வெரிபிகேஷனுக்காக அதில் அவரது சிம் காா்டை பொருத்துமாறு கூறியுள்ளாா்.

Advertisement

Advertisement

அதன்படி கீா்த்திவாசன், சிம்காா்டை அந்த கைப்பேசியில் பொருத்திய சிறிது நேரத்திலேயே, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.10 லட்சமும், கிரெடிட் காா்டு மூலம் ரூ.7 லட்சத்து 60 ஆயிரத்து 440 என மொத்தம் ரூ.17 லட்சத்து 60 ஆயிரத்து 440 மோசடி செய்யப்பட்டது.

இது குறித்து கீா்த்திவாசன், சென்னை காவல் துறை கிழக்கு மண்டல சைபா் குற்றப்பிரிவில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விசாரணையில், மேற்குவங்க மாநிலம் முா்ஷிதாபாத் மாவட்டம் நவ்தா பகுதியைச் சோ்ந்த அபுல் உசேன் ஷேக் (26) இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா், அபுல் உசேன் ஷேக்கை திங்கள்கிழமை கைது செய்தனா்.