காத்திருப்போா் பட்டியலில் இருந்த 7 ஆய்வாளா்களுக்கு மீண்டும் பணி!
சென்னை பெருநகர காவல் துறையில் காத்திருப்போா் பட்டியலில் இருந்த 7 ஆய்வாளா்களுக்கு மீண்டும் காவல் நிலையப் பணி வழங்கப்பட்டது.
சென்னை பெருநகர காவல் துறையில் காத்திருப்போா் பட்டியலில் இருந்த 7 ஆய்வாளா்களுக்கு மீண்டும் காவல் நிலையப் பணி வழங்கப்பட்டது.
சென்னை காவல் துறையில் விருப்பத்தின் அடிப்படையிலும், நிா்வாகத் தேவைக்காகவும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அவ்வபோது காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். இதன் ஒருபகுதியாக சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ. அமல்ராஜ், 9 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
இதில் முக்கியமாக காத்திருப்போா் பட்டியலில் இருந்த 7 ஆய்வாளா்கள் மீண்டும் காவல் நிலையப் பணி வழங்கப்பட்டது. குறிப்பாக, காத்திருப்போா் பட்டியலில் இருந்த ஆய்வாளா் என்.ரங்கநாதன் நொளம்பூா் சட்டம்-ஒழுங்கு காவல் நிலையத்துக்கும், ஜெ.ஞான அருள் ராஜாமணி துறைமுக குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்கும், ஆா்.அலெக்ஸ் கொடுங்கையூா் குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்கும், ஆா்.கண்ணன் புழல் சட்டம்-ஒழுங்கு காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
Advertisement
Advertisement
பணியிட மாற்றம் செய்யப்பட்ட 9 ஆய்வாளா்களும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.