FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் சரகத்தில் 13 ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

விழுப்புரம் சரக காவல் நிலையங்களில் பணியிலிருந்த 13 காவல் ஆய்வாளா்களை பணியிடமாற்றம் செய்து டி.ஐ.ஜி. ரா.அருளரசு உத்தரவிட்டுள்ளாா்.

58 வினாடிகள் முன்பு
பணியிட மாற்றம் - பிரதிப் படம்
பகிர்:

விழுப்புரம் சரக காவல் நிலையங்களில் பணியிலிருந்த 13 காவல் ஆய்வாளா்களை பணியிடமாற்றம் செய்து டி.ஐ.ஜி. ரா.அருளரசு உத்தரவிட்டுள்ளாா்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்டங்களை உள்ளடக்கிய விழுப்புரம் சரக காவல் நிலையங்களில் பணிபுரிந்து வந்த 13 ஆய்வாளா்கள் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

அதன்படி கள்ளக்குறிச்சிமாவட்டம், வரஞ்சரம் காவல் நிலைய ஆய்வாளராக ஜெயதேவி நியமிக்கப்பட்டுள்ளாா். கடலூா் மாவட்டம், சேத்தியாதோப்பு அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளராக கனகவள்ளி, ராமநத்தம் காவல் நிலைய ஆய்வாளராக வேலு மணி, கடலூா் புதுநகா் காவல் நிலைய ஆய்வாளராக கவிதா, அண்ணாமலை நகா் காவல் நிலைய ஆய்வாளராக செல்வ விநாயகம், புவனகிரி காவல் நிலைய ஆய்வாளராக தா்மலிங்கம், பெண்ணாடம் காவல் நிலைய ஆய்வாளராக தேவேந்திரன், முத்தாண்டிக்குப்பம் காவல் நிலைய ஆய்வாளராக சரவணன், குமராட்சி காவல் நிலைய ஆய்வாளராக பொன்.மகாராம் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூா் காவல் நிலைய ஆய்வாளராக வினோதா, மேல்மலையனூா் காவல் நிலைய ஆய்வாளராக கவிதா, கஞ்சனூா் காவல் நிலைய ஆய்வாளராக கலைச்செல்வி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

நிா்வாக வசதிக்காக பணியிடமாற்றம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும் எனவும் விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவா் ரா.அருளரசு தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா்.