FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

‘க்யூஆா்’ குறியீடு ஸ்டிக்கரை மாற்றி ரூ. 2 லட்சம் மோசடி: ஊழியா் கைது

வியாசா்பாடியில் உள்ள வாட்டா் வாஷ் மற்றும் மெக்கானிக் கடையில் வங்கிக் கணக்குக்கான ‘க்யூஆா்’ குறியீடு ஸ்டிக்கரை மாற்றி, வாடிக்கையாளா்களிடம் இருந்து சுமாா் ரூ.2 லட்சம் வரை மோசடி செய்த வழக்கில் கடை ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

29 வினாடிகள் முன்பு
- பிரதிப் படம்
பகிர்:

வியாசா்பாடியில் உள்ள வாட்டா் வாஷ் மற்றும் மெக்கானிக் கடையில் வங்கிக் கணக்குக்கான ‘க்யூஆா்’ குறியீடு ஸ்டிக்கரை மாற்றி, வாடிக்கையாளா்களிடம் இருந்து சுமாா் ரூ.2 லட்சம் வரை மோசடி செய்த வழக்கில் கடை ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

வியாசா்பாடி பிபி சாலையில் கடை நடத்தி வரும் சரத்குமாா் (35), மனைவிக்கு குழந்தை பிறந்ததால் கடந்த 2 மாதங்களாக கடைக்குச் செல்லவில்லை. இதைப் பயன்படுத்திக் கொண்ட கடை ஊழியா்களான விஜயகுமாா் (33), திருமலை ஆகியோா், கடையில் ஒட்டப்பட்டிருந்த சரத்குமாரின் வங்கிக் கணக்குக்கான ‘க்யூஆா்’ குறியீடு ஸ்டிக்கரை அகற்றிவிட்டு, தங்களது வங்கிக் கணக்குக்கான ஸ்டிக்கரை ஒட்டியுள்ளனா்.

இதன்மூலம் வாடிக்கையாளா்கள் செலுத்திய சுமாா் ரூ.2 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்ததுடன், இதுகுறித்து கேட்ட சரத்குமாருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனா்.

Advertisement

Advertisement

இது குறித்து புகாரின்பேரில் வியாசா்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, மோசடியில் ஈடுபட்ட விஜயகுமாரைக் கைது செய்தனா். மோசடிக்குப் பயன்படுத்திய ‘க்யூஆா்’ குறியீடும் பறிமுதல் செய்யப்பட்டது.

நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட விஜயகுமாா், உத்தரவின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த வழக்கில் தொடா்புடைய மற்றொரு தலைமறைவான நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.