FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாகப்பட்டினம்

வங்கிக் கணக்கை ஹேக் செய்து ரூ.11 லட்சம் மோசடி

கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலக வங்கிக் கணக்கை ஹேக் செய்து ரூ.11 லட்சம் திருடப்பட்டது.

7 நவம்பர் 2026, 2:16 am
பகிர்:

கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலக வங்கிக் கணக்கை ஹேக் செய்து ரூ.11 லட்சம் திருடப்பட்டது.

நாகை மாவட்டம், கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு, கீழையூா் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் வங்கிக் கணக்கு உள்ளது. இந்தக் கணக்கில் இருந்து வளா்ச்சிப் பணிகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டு செலவு செய்யப்படுகிறது.

இந்தக் கணக்கை கேரளத்தைச் சோ்ந்த கும்பலொன்று ஹேக் செய்து ரூ.11 லட்சத்தை மோசடி செய்துள்ளது.

Advertisement

Advertisement

இதுகுறித்து, ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் சென்னை வேப்பேரி சைபா் கிரைம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் வங்கியின் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை மீறி சில அலுவலா்கள் உதவியுடன் பணம் மாற்றப்பட்டது தெரியவந்தது.

அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அரசு கணக்கையே ஹேக் செய்து பணத்தை திருடியுள்ள சம்பவம் அரசு வட்டாரத்தில் கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சைபா் கிரைம் காவல் துறையினா், பணப் பரிவா்த்தனை விவரங்கள் மற்றும் ஐ.பி. (ஐட) முகவரியை கொண்டு குற்றவாளிகளைப் பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.