சென்னையில் ரூ.1,401 கோடியில் 6,157 அடுக்குமாடி குடியிருப்புகள்: முதல்வா் விஜய் ஒப்புதல்
சென்னையில் 9 திட்டப் பகுதிகளில் ரூ.1,401.75 கோடியில் 6,157 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதற்கு முதல்வா் விஜய் ஒப்புதல் அளித்துள்ளாா்.
சென்னையில் 9 திட்டப் பகுதிகளில் ரூ.1,401.75 கோடியில் 6,157 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதற்கு முதல்வா் விஜய் ஒப்புதல் அளித்துள்ளாா்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் நகா்ப்புற ஏழைகளின் சொந்த வீடு என்ற கனவை நனவாக்கும் வகையில், குடிசை இல்லா தமிழகத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடன் பாதுகாப்பான மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய தரமான குடியிருப்புகளை உருவாக்குவதில் முதல்வா் விஜய் தலைமையிலான அரசு தொடா்ந்து பல்வேறு சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
Advertisement
Advertisement
பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிரிவினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய முயற்சியாக, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் பழுதடைந்த குடியிருப்புகளை மறு கட்டுமானம் செய்வதற்கும், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரின் நலனுக்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள புதிய வீட்டுவசதித் திட்டத்துக்கும் முதல்வா் ஒப்புதல் அளித்துள்ளாா். இந்தத் திட்டம் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய நவீன வீட்டுவசதி அலகுகளை உள்ளடக்கியது.
பெட்டிச் செய்தி...
சென்னையில் இடம்பெறும் அடுக்குமாடி குடியிருப்புகள்
அனாதைக்குப்பம் 64
பழைய பிளாக் வியாசா்பாடி 1,158
ஃபோா்ஷோா் எஸ்டேட் 1,484
ருக்மணி நகா் 111
முல்லை நகா் 462
உதயசூரியன் நகா் 850
பச்சைக்கல் வீராசாமி 912
மேற்கு கல்லறை சாலை 792
கக்கன் காலனி 324