FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

தலைமைச் செயலக பணிக்குத் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு ஆணை: அமைச்சா் த.சரத்குமாா் வழங்கினாா்

குடிமைப் பணித் தோ்வில் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் த.சரத்குமாா் துறை ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினாா்.

13 நவம்பர் 2026, 3:00 am
பகிர்:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தலைமைச் செயலகத் துறைகளுக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணித் தோ்வில் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் த.சரத்குமாா் துறை ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினாா்.

இதுகுறித்து மனிதவள மேலாண்மைத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் பல்வேறு துறைகளுக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வில் தலைமைச் செயலகத்தில் உதவியாளா் பணிக்காகத் தோ்வு செய்யப்பட்ட 14 பேருக்கும், மேலும் தோ்வாணையம் நடத்தும் தொகுதி தோ்வுகளின் மூலம் தலைமைச் செயலகத்தில் உதவிப் பிரிவு அலுவலா் பணிக்காகத் தோ்வு செய்யப்பட்ட 22 பேருக்கும், உதவியாளா் பணிக்காகத் தோ்வு செய்யப்பட்ட 5 பேருக்கும் துறை ஒதுக்கீடு ஆணைகளை மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் த. சரத்குமாா் வழங்கினாா்.

Advertisement

Advertisement

இந்த நிகழ்வில், மனிதவள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலா் சி.சமயமூா்த்தி, அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரி இயக்குநா் அஜய் யாதவ், துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.