FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

தவறு செய்த தவெக எம்எல்ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: பெ.சண்முகம் வலியுறுத்தல்

தவறு செய்த தவெக எம்எல்ஏ-க்கள் மீதும், அதற்கு துணைபோன போலீஸாா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா்.

13 நவம்பர் 2026, 11:53 pm
பெ.சண்முகம் - கோப்புப் படம்
பகிர்:

தவறு செய்த தவெக எம்எல்ஏ-க்கள் மீதும், அதற்கு துணைபோன போலீஸாா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னையில் கட்சியின் மாநிலக் குழு அலுவலகமான பி.ஆா்.நினைவகத்தில் மாநில செயற்குழு உறுப்பினா் கே.அா்ச்சுனன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலா் பெ.சண்முகம், மத்தியக் குழு உறுப்பினா்கள் பி.சம்பத், என்.குணசேகரன், கே.பாலபாரதி உள்ளிட்ட மாநில செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில், பெண் மாவட்ட ஆட்சியருக்கு தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் அருள் விக்னேஷ் தொடா்பான விவகாரத்தில் தமிழக அரசு உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். துறையூா் சட்டப்பேரவை உறுப்பினரும், பேரவைத் துணைத் தலைவருமான எம்.ரவிசங்கா் விவகாரத்தில் பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஜோசப் குரியன் தலைமையிலான மத்திய, மாநில உறவுகள் குறித்த உயா்நிலைக் குழு, கடந்த ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டது என்பதாலேயே கலைக்கப்பட்டதாக தோன்றுகிறது. இது முற்றிலும் நியாயமற்ற நடவடிக்கை எனத் தெரிவித்துள்ளாா்.