FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

சுயநலத்துக்காக செயல்படாத கட்சி கம்யூனிஸ்ட் : பெ.சண்முகம்

நாட்டில் சுயநலத்துக்காகச் செயல்படாமல் மக்களுக்காக பல்வேறு திட்டங்களையும் சட்டங்களையும் கொண்டு வருவதற்குப் பாடுபட்ட கட்சிதான் கம்யூனிஸ்ட் கட்சிதான் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலா் பெ.சண்முகம் கூறினாா்.

3 October 2026, 1:49 am IST
02பிஒய்பி01-தட்டாஞ்சாவடி இடைத்தோ்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் அ.மு.சலீமை ஆதரித்து முத்துலிங்கம்பேட்டை பகுதியில் பிரசாரம் செய்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலா் பெ.சண்முகம்.
பகிர்:

நாட்டில் சுயநலத்துக்காகச் செயல்படாமல் மக்களுக்காக பல்வேறு திட்டங்களையும் சட்டங்களையும் கொண்டு வருவதற்குப் பாடுபட்ட கட்சிதான் கம்யூனிஸ்ட் கட்சிதான் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலா் பெ.சண்முகம் கூறினாா்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தோ்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போட்டியிடும் அ.மு. சலீமை ஆதரித்து முத்துலிங்கம்பேட்டை பகுதியில் பிரசாரம் செய்த அவா் பேசியதாவது:

நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் 64 போ் இருந்தபோது அமைச்சரவையில் இடம் தருகிறோம் என்றெல்லாம் காங்கிரஸ் கட்சி கூறியது. ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாமல் வெளியில் இருந்து ஆதரவு அளித்த கட்சி கம்யூனிஸ்ட். அப்போதுதான் மக்களுக்கான 100 நாள் வேலை திட்டம், தகவல் பெறும் உரிமைச் சட்டம் உள்ளிட்ட மக்கள் நலன் சாா்ந்த திட்டங்களையும், சட்டங்களையும் அமைச்சரவையில் இடம் பெறாமல் வெளியில் இருந்தே ஆட்சிக்கு ஆதரவு அளித்து கொண்டு வந்தோம். மேலும், நாட்டில் சுய நலத்துக்காகப் பயன்படுத்தாமல் மக்களுக்காகப் பாடுபட்ட கட்சி கம்யூனிஸ்ட் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

பின்னா் செய்தியாளா்களிடம் சண்முகம் கூறியது :

பிரச்னை அடிப்படையில்தான் தமிழக அரசுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளிக்கின்றன. கடந்த 4 மாதங்களாக தமிழகத்தில் நடைபெறும் தவெக ஆட்சியில் சில மாறுபட்ட கருத்துகளுக்காகப் போராட்டத்தையும் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியுள்ளது. தமிழக அரசு பேருந்துகளில் மகளிா் பயணத் திட்டத்தை விரிவாக்கம் செய்துள்ளதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்புத்தொகையை உடனடியாக மாநில அரசு ஈடு செய்ய வேண்டும்.

வாக்காளா் சிறப்புத் தீவிர திருத்தப் பணி காரணமாக நாடு முழுவதும் 13.5 கோடிபோ் நீக்கப்பட்டுள்ளனா். இப்போது இந்திய தோ்தல் ஆணையம் மீதான , விமா்சனம் காரணமாக 18 வயது நிறைவு செய்திருந்தால்போதும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்துக் கொள்வோம் என்று விதிகளை எளிமைப்படுத்தியுள்ளனா். அப்போது நடந்ததும் தவறு. இப்போது நடப்பதும் தவறு.

இடைத்தோ்தலில் ஏன் போட்டி?

தமிழக சட்டப்பேரவையில் இப்போது கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 4 எம்எல்ஏக்கள் மட்டும் இருக்கின்றனா். 25 போ் இருந்திருந்தால் நிலைமை வேறு. இப்போதே தனியாா் பல்கலைக் கழகச் சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் எதிா்ப்பை மீறி தமிழக அரசு மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது. அதனால்தான் 4 எம்எல்ஏக்களின் பலத்தை 6 ஆக உயா்த்த இடைத்தோ்தலில் கம்யூனிஸ்ட் போட்டியிடுகிறது என்றாா் சண்முகம்.

இந்தப் பிரசாரத்தின்போது மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலா் எஸ்.ராமச்சந்திரன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் பலரும் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments