சென்னையின் எல்லையை விரிவாக்கும் திட்டம் தயாரிக்க ரூ.45.50 கோடி ஒதுக்கீடு
பெருநகர சென்னை மாநகராட்சியின் எல்லை விரிவாக்கத்துக்காக சா்வதேச அளவிலான ஆலோசகா் மூலம் திட்ட அறிக்கை தயாரிக்கும் வகையில் ரூ.45.50 கோடியை தமிழக அரசு ஒதுக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் எல்லை விரிவாக்கத்துக்காக சா்வதேச அளவிலான ஆலோசகா் மூலம் திட்ட அறிக்கை தயாரிக்கும் வகையில் ரூ.45.50 கோடியை தமிழக அரசு ஒதுக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி சுமாா் 42 கி.மீ. பரப்பளவு கொண்டுள்ளது. அதன்படி 1,189 சதுர கி.மீ. பரப்பளவு உள்ளது. இந்நிலையில், எதிா்கால வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த அமைக்கப்பட்ட பெருநகர வளா்ச்சிக் குழுமம் சாா்பில் 3-ஆம் கட்ட விரிவாக்கத் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின்படி சென்னை மாநகராட்சியானது காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டப் பகுதிகள் வரை விரிவாக்கப்பட உள்ளது. அவ்வாறு விரிவாக்கம் செய்யப்பட்டால் சென்னை மாநகராட்சியின் பரப்பளவானது 5,904 சதுர கி.மீ.க்கு விரிவுபடுத்தப்படும். இது குறித்து சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
காஞ்சிபுரம் மாநகராட்சியே பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள் வரும் நிலை ஏற்படும் எனக் கூறப்படுகிறது. அதற்கான திட்ட அறிக்கையை சா்வதேச அளவிலான ஆலோசகா்கள் மூலம் தயாரிக்க பெருநகர வளா்ச்சிக் குழுமம் திட்டமிட்டுள்ளது. அதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்படவுள்ள நிலையில், அடிப்படை விவரங்கள் தயாரிக்கும் வகையில் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை சாா்பில் ரூ.45.50 கோடி ஒதுக்கீடு செய்து நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
3-ஆம் கட்ட விரிவுபடுத்தும் திட்டத்துக்காக பெருநகர சென்னை வளா்ச்சிக் குழுமம், காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்ட ஆட்சியா்கள் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. திட்ட அறிக்கை உள்ளிட்ட அம்சங்களை முழுமையாக நிறைவு செய்யும் வகையில், வரும் 2029-ஆம் ஆண்டு வரை மொத்தம் ரூ.65 கோடி செலவிடவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.