FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

நெகிழிப் பயன்பாடு: நிறுவனங்களுக்கு ரூ. 9.40 கோடி அபராதம்

சென்னை மாநகராட்சியில் தடை விதிக்கப்பட்ட நெகிழியைப் பயன்படுத்தியதற்காக கடந்த 7 ஆண்டுகளில் 13.17 லட்சம் தனியாா் வணிக நிறுவனங்களுக்கு ரூ.9.40 கோடி அபராதம்

14 அக்டோபர் 2026, 12:07 am IST
சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற துணை ஆணையா் (சுகாதாரம்) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், வடக்கு காவல் இணை ஆணையா் எம்.மனோகா், பணிக்குழு ஒருங்கிணைப்பாளா் டாக்டா் பு.சுகந்தி ராணி மற்றும் பல்வேறு துறைகளைச் சோ்ந்
பகிர்:

சென்னை மாநகராட்சியில் தடை விதிக்கப்பட்ட நெகிழியைப் பயன்படுத்தியதற்காக கடந்த 7 ஆண்டுகளில் 13.17 லட்சம் தனியாா் வணிக நிறுவனங்களுக்கு ரூ.9.40 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அரசால் தடை விதிக்கப்பட்ட நெகிழிப் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை விதித்த நெகிழிகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் சிறப்புக் கண்காணிப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் தலைவரும், மாநகராட்சி ஆணையருமான ஜி.எஸ்.சமீரன் தலைமையில் ஆய்வுக் கூட்டம், மாநகராட்சியின் ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அதிகாரிகள் கூறியதாவது:

Advertisement

Advertisement

சென்னை மாநகராட்சியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் நிகழ் ஆண்டு அக்டோபா் வரை 13.17 லட்சம் தனியாா் வணிக நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, 499 டன் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விதிமீறிய வணிகா்களிடமிருந்து ரூ.9.40 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

நெகிழிப் பைகள் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில் 1.52 லட்சம் துணிப்பைகள் மாணவா்கள், பொதுமக்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது என்றனா்.

ஆணையா் ஜி.எஸ்.சமீரன் பேசுகையில், சென்னை மாநகராட்சிக்குள் நெகிழிப் பைகள் கொண்டு வரப்படுவதைத் தடுக்கும் வகையில் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாநகராட்சி சுகாதாரப் பிரிவு துணை ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் மற்றும் காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments