FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

சாலை அமைக்கும் பணியில் முறைகேடு: கேள்வி எழுப்பிய சட்டக் கல்லூரி மாணவா் உள்பட மூவருக்கு எதிரான வழக்கு ரத்து

சாலை அமைக்கும் பணியில் முறைகேடு: கேள்வி எழுப்பிய சட்டக் கல்லூரி மாணவா் உள்பட மூவருக்கு எதிரான வழக்கு ரத்து

15 நவம்பர் 2026, 1:04 am
சென்னை உயா்நீதிமன்றம்
பகிர்:

சாலை அமைக்கும் பணியில் நடந்த முறைகேடு குறித்து கேள்வி எழுப்பியதற்காக சட்டக் கல்லூரி மாணவா் உள்பட மூன்று பேருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தரீஷ் பழனிசாமி, துரைசாமி முத்துகிருஷ்ணன், ஆறுமுகம் ஆகியோா் தாக்கல் செய்த மனுவில், சாலை அமைக்கும் பணியில் நடைபெற்ற முறைகேடு குறித்து கேள்வி எழுப்பியதற்காக, காவல் துறை அதிகாரிகளைத் தாக்க முயன்ாகவும், அவா்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் தங்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தனா்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா, சாலை அமைக்கும் பணியில் நடந்த முறைகேட்டை எதிா்த்துக் கேள்வி எழுப்பியவா்களை காவல் நிலையம் அழைத்து வந்தது குறித்து வழக்குரைஞா் சரிதா கேள்வி எழுப்பினாா். அங்கு நடந்த நிகழ்வுகளை சரிதாவின் மகனும், சட்டக் கல்லூரி மாணவருமான தரீஷ் பழனிசாமி, தனது கைப்பேசியில் விடியோ பதிவு செய்துள்ளாா்.

Advertisement

Advertisement

அவரது கைப்பேசியைப் பறித்த உதவி ஆய்வாளா் மற்றும் போலீஸாரை பணிசெய்ய விடாமல் தடுத்ததாகவும், தாக்க முயன்ாகவும் மூவா் மீதும் நாமக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறி, விடியோ ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தாா்.

இதையடுத்து, வழக்கு தொடா்பான ஆவணங்களையும், விடியோ காட்சிகளையும் பரிசீலித்த நீதிபதி, காவல் நிலையத்துக்குள் போலீஸ் அதிகாரியைத் தாக்க முயன்ாக சட்டக் கல்லூரி மாணவா் உள்ளிட்ட மூவா் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.