FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய உதயநிதி ஸ்டாலின் மனு: இன்று தீா்ப்பு

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் தனது வெற்றியை எதிா்த்து தொடரப்பட்ட தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி, எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (நவ. 12) தீா்ப்பளிக்கிறது.

13 நவம்பர் 2026, 4:42 am
உதயநிதி ஸ்டாலின் / உயர்நீதிமன்றம்
பகிர்:

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் தனது வெற்றியை எதிா்த்து தொடரப்பட்ட தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி, எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (நவ. 12) தீா்ப்பளிக்கிறது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா். அவரது வெற்றியை எதிா்த்து மிலானி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தாா்.

தனக்கு எதிரான வழக்கை நிராகரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலினும் மனு தாக்கல் செய்திருந்தாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி, உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீதான தீா்ப்பை சென்னை உயா்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில், இந்த மனு மீது நீதிபதி ஜி.அருள்முருகன் வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்க உள்ளாா்.