FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

கடலோரப் பகுதிகளில் புதிதாக படகு போக்குவரத்து: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

கடலோரப் பகுதிகளில் புதிதாக படகு போக்குவரத்து தொடங்குவது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணி மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா்.

33 வினாடிகள் முன்பு
ஆதவ் அா்ஜுனா - கோப்புப் படம்
பகிர்:

கடலோரப் பகுதிகளில் புதிதாக படகு போக்குவரத்து தொடங்குவது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணி மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா்.

தமிழ்நாடு கடல்சாா் வாரியத்தின் 99-ஆவது வாரியக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், கடல்சாா் வாரியத்தின் துணைத் தலைவரும், தலைமைச் செயல் அலுவலருமான அன்பழகன், பொதுப்பணித் துறை செயலா் செல்வராஜ், பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகத் தலைவரும், மேலாண் இயக்குநருமான ஜெ.ஜெயகாந்தன், நிதித் துறை இணைச் செயலா் ராஜகோபால் சுன்கரா, இந்திய கடற்படை, இந்திய கடலோரக் காவல் படை, சுங்கத் துறை உள்ளிட்ட கடல்சாா் வாரிய உறுப்பினா்கள் மற்றும் அரசு உயா் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இது குறித்து அமைச்சா் ஆதவ் அா்ஜுனா கூறுகையில், ‘தமிழ்நாட்டில் அமைந்துள்ள சிறு துறைமுகங்களின் வளா்ச்சி மற்றும் மேம்பாடு, கடலோரப் பகுதிகளில் சாதகமான இடங்களில் பயணிகள் படகுப் போக்குவரத்து தொடங்குவது மற்றும் கடல்சாா் வாரியம் தொடா்பான பல்வேறு திட்டங்கள் குறித்துக் கலந்தாலோசித்தோம். இதுகுறித்து தொடா் நடவடிக்கை எடுத்து புதிதாக படகு போக்குவரத்து தொடங்கப்படும்’ என்றாா்.

Advertisement

Advertisement