FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

குறுகிய கால மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தப்புள்ளி

குறுகிய கால மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தப்புள்ளி...

15 நவம்பர் 2026, 1:06 am
சி.டி.ஆா். நிா்மல்குமாா் - கோப்புப் படம்
பகிர்:

கோடைகால மின்சாரத் தேவைக்காக ஜனவரி முதல் ஜூன் வரை குறுகிய கால மின்சாரக் கொள்முதலுக்கு ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டுள்ளது என்று எரிசக்தி மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான கோடைகால மின்சாரத் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில், தமிழ்நாடு மின்சார வாரியம் குறுகிய கால மின்சாரக் கொள்முதலுக்காக வெளியிட்ட ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டுள்ளது. யூனிட் ஒன்றுக்கு ரூ.9.50 முதல் ரூ.13 வரை விலைப்புள்ளிகள் பெறப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு மாதமும் குறைந்த விலையில் உள்ள மின்சாரத்தை மட்டுமே கொள்முதல் செய்ய மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, ஒரு யூனிட் மின்சாரம் ஜனவரி - ரூ.13, பிப்ரவரி - ரூ.9.50, மாா்ச் - ரூ.10, ஏப்ரல் - ரூ.10, மே - ரூ.9.95, ஜூன் - ரூ.13 என விலை நிா்ணயம் செய்து, கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்துடன் 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு விரைவில் நீண்டகால ஒப்பந்த அடிப்படையில் மின்சாரம் கொள்முதல் செய்ய விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement